பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்காலம் நம் நாட்டில் ஆங்கி லேயர் அமைத்தகலைக் கழகங்கள், நம்மை ஆட்சிச் சக்கரத்தில் சிக்கவைக்கக் கண்டோம்; ஆமாம் சாமியெனும் அடிமைகளாய் ஆக்கக் கண்டோம். இக்கழகம் அடிமைவிலங் கொடித்த பின்னர் எழுகின்ற இளம்பரிதிக் கழகம்; நாட்டு மக்களினை ஒளிபடைத்த கண்ணா என்று மகிழ்வோடு வரவேற்கும் கழக மாகும். புலியொறித்து விற்பொறித்துக் கங்கை கொண்ட புல்லரிக்கும் வரலாற்றைப் படிக்கும் நீங்கள் எலியாக ஏனிருக்க வேண்டும்? உங்கள் இணையற்ற திருக்குறள் மேகலை சிலம்பின் ஒலிமுழக்கம் உலகிலினிக் கேட்க, நாளும் ஒயாமல் இக்கழகம் முயல வேண்டும். கலைவளர்க்கும் கனித்தமிழை, இந்த நாட்டின் கண்ணியத்தைக் கண்ணிரண்டாய்க் காக்க வேண்டும். தட்டைக்காய்க் கொடுக்காலே தாக்கு கின்ற தமிழ்நாட்டுத் தேள்நஞ்சு குளிர்ந்த தென்றும் வட்டமலர் வாயமுதை உதட்டில் தேக்கி வருகின்ற வண்டுதரும் வெளிநாட்டுத்தேன் எட்டிக்காய் போன்றதென்றும் சொல்ல லாமா? இளந்தென்றல் எங்கிருந்து வந்தால் என்ன? கிட்டரிய கருத்துக்கள் எந்த நாட்டில் கிடைத்தாலும் இக்கழகம் ஏற்க வேண்டும். கவிஞர் முருகுசுந்தரம் 28O