பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறிக்குயில் எக்கா ளங்கள் புடைசூழப் படையெ டுக்கும் கருப்புவிற் கார னுக்குக் களமானேன்; அவன்வி டுக்கும் நெருப்புக்கூர்க் கணைகி ழிக்க நிற்குமென் நெஞ்சைத் தைக்க விருப்பமா? இன்றேல் காதல் வேக்காடு சாக்கா டாகும். மாமரத் தோன்த விர்த்து மறுபிறப் பெடுத்தான்; புன்னைப் பூமரத் தோன்வி ரிந்து புதுப்பணக் காரன் ஆனான். காமனைக் கணைமு றித்துத் கடத்திய நானோ, இந்நாள் ஏமாற்றக் கன்னி யானேன்; இலையுதிர் கால மானேன். சலிக்காத விருப்பக் காதற் சாப்பாடு சலிப்ப துண்டா? மலைக்கோட்டுப் பரிதித் தீயை மழைவந்து நனைப்ப துண்டா? அலித்தன்மை வண்டுக் குண்டா அல்லிப்பூக் குளத்தில்? இன்று புலித்தென்றல் போராட் டத்தைப் பொறுக்கவா? இறக்க வாநான்? முருகுசுந்தரம் கவிதைகள் 285