பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுக்கைவேல் குத்தும்; பட்டுப் பஞ்சணை இன்றைக் கேனோ முடிச்சுமுள் நெருஞ்சி யாகி மூன்றுகொம் பாலே முட்டும். அடிக்கடி துருத்தி நெஞ்சம் அனற்காற்றை ஊதும்; வந்து கடிக்குமே பிரிவுப் பாம்பு! கட்டாயம் அழிந்து போவேன். நெருப்பினை ஈக்கள் மொய்க்க நெருங்குமா? யானைக் கொம்பை அரிக்குமா கறையான்? தங்க ஆசனத் திருக்கும் முத்தில் துருப்பிடிப் பதுவு முண்டா? தோகையென் கற்பு நெஞ்சம் அரக்குமா விகையென் றெண்ணி அகலாதீர்; நெருப்புக் கோட்டை! வயிரத்தைத் தேய்க்கும் மற்றோர் வயிரமே சிந்திக் காமல் உயிருக்குச் சுருக்கு வைத்தே ஒடுதல் நன்றா? என்றன் உயரத்தை நான்பி றந்த உளைச்சேற்றால் அளக்க வேண்டாம்; வயிரத்தின் தரத்தைப் பார்க்க வாயினால் கடிப்பா ருண்டா? கவிஞர் முருகுசுந்தரம் 286