பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனையின் எச்ச மென்றே புனுகினை வெறுக்க லாமா? கானவாய்க் குழலைக் காட்டுக் கழையென வீச லாமா? தேனுந்தான் ஈயின் எச்சில்! தேவரீர் இந்தப் புள்ளி மானையும் நடிக்கும் ஆடல் மகளென்று தள்ள லாமா? தூக்கணங் குருவிக் கூட்டின் தோற்றத்தை யுடைய யாழின் நாக்கான நரம்பைத் தொட்டு நானிசை எழுப்பிப் பார்த்தேன். துக்கென்றும் பாணி யென்றும் தொடுக்கின்ற இசைவெள்ளத்தைக் காக்கின்ற ஆணி இன்று கழன்றதால் மயங்கி நின்றேன். ஒப்பற்ற பெரிய வானின் உயரத்தில், நடுவில் தீய்ந்த அப்பத்து வெண்ணி லாவால் ஆயிரம் கொப்பு ளங்கள். வெப்பத்துக் காமம் வந்து வெதுப்புவ தாலே, என்றன் கொப்பத்து வெல்ல மார்பில் கொப்புளம் கோடி கோடி! முருகுசுந்தரம் கவிதைகள் 287