பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழுத்துநாண் வளைத்த விற்போல் இதழ்களைக் கொண்ட உங்கள் செழித்தபொன் மேக லைமேல் சீற்றமா? குருக்கள் முன்னால் கழுத்தைநான் வளைக்க வில்லை கயிற்றுப்பொன் வேலிக் காக! பழச்சுவைக் காரி நான்உம் படுக்கைப்பங் காளி யன்றோ? காவிரி புணரும் நீங்கள் கங்கையைப் புணரு தற்கே ஆவலேன் கொண்டீர்? கொண்டால் அதைவெளிப் படுத்த லாமா? சேவலின் கொக்க ரிப்புத் தெரியாத கோழி யாநான்? கோவலர் கூற்றை யாழைக் கொண்டுநான் மறுக்கப் பார்த்தேன். மாதவிக் கொடிய டர்ந்த மஞ்சத்தை மற்றொருத்தி பாதியாய்க் குறைக்க வந்தால் பார்த்துக்கொண் டிருப்ப னோநான்? வேதனை நெருப்புக் குன்றம் வெடித்தது; மூடி யாலே மாதுநான் அதைய டக்க மனங்கொண்டேன்; தோல்வி கண்டேன் முருகுசுந்தரம் கவிதைகள் 289