பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசையின் மாடத்தில் அணைந்து விடுமோ என்று அஞ்சும்படி மெலிதாக எரியும் அகல் விளக்கு. அவள் மார்க் கச்சைபோல் போதியும் போதாதது மான மான் தோல் விரித்த மூங்கில் கட்டில். அதன் மீது அண்டை வீட்டு ரிஷிபத்தினிகள் கொண்டு வந்து சிதறிய காட்டுப் பூக்கள். அவளே பாரமாகி அவளையே அழுத்தும் பிரமை! கூரையில் ஒரு சிலந்திக் கூடு. அவள் மனச்சிக்கல்போல் அதுவும் பெரிதாகிப் படர, அதன் நடுவில் ஒட்டிக் கொண்டிருந்த சிலந்தியும் உருண்டு திரண்டு ஒரு ராட்சதச் சிலந்தியாக வளர, தான் ஓர் ஈயாக மாறி வலையில் சிக்கிக் கொள்ள, சிலந்தியின் வளைந்த இடுக்கிப் பற்கள் தன்னை நெருங்கிவர அவள்பரிதாபமான இசிப்போடு கதறி மயங்கி விழுகிறாள். கவிஞர் முருகுசுந்தரம் 24