பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமொட்டுப் பருவத்தைப் பொன்னிழைத்த தொட்டிலிலே கழித்து விட்டு மதுமொட்டுப் பருவத்தை மதக்கன்னி மாடத்தில் கழித்து விட்டுப் பதினெட்டுப் பருவத்தைப் பஞ்சணையில் கழிக்கின்ற படுக்கைப் பூவே! மதி நட்டுக் கொலுவிருக்கும் கழுத்தழகி நானுன்னை மறப்ப தெங்கே! வரிக்கண்ணால் உன்னைப்போல் வார்த்தைகளை வழங்குமிந்தப் புத்த கத்தைச் சிரிப்புமலர் மரத்தடியில் சீக்கிரத்தில் நான்படித்து முடித்து விட்டேன். சுருக்கிவைத்த சுவைக்காம சூத்திரநூல் போன்றவளே! வெறும் எழுத்தை நெருக்கிவைத்த புத்தகத்தை நீயிருந்தால் நான்விரும்பித் தொடவே மாட்டேன். கவிஞர் முருகுசுந்தரம் 3OO