பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிநரைத்த தலை யோடு பார்மீது படுத்திருக்கும் முதிய ஆல்ப்சும், நினைந்துநினைந் திரவெல்லாம் நெஞ்சுருக ஒலமிடும் - கடற்கைம் பெண்ணும், கனிமொழியே நம்மிருவர் கட்டிலினைப் பிரித்ததுண்டு; கடலும் குன்றும் இனி நம்மைப் பிரிக்காமல் இருப்பதற்குத் தடைபோட இன்றே நீவா! கட்டுரை தெய்வீகப் பெருஞ்சுமை 'சமயமும் சமுதருமமும்' என்பது பற்றி உருசிய நாட்டின் புரட்சித் தந்தை லெனின் எழுதியுள்ள கட்டுரையின் பிழிவு இது. கருத்து அவருடையது; கவிதை என்னுடையது. எலிப்பொறிதான் சமுதாயம்; இந்த நாட்டில் ஏழைகளின் நல்வாழ்வை மிகக் குறைந்த நிலப்பிரபும் செல்வர்களும் சுரண்டு கின்றார். நீர்ப்பாம்பு திமிங்கிலத்தை விழுங்க லாமா? அலுத்துவரும் பாட்டாளி வாங்கும் கூலி ஆவியினை வைத்திருக்கத் தானே யன்றிக் கழுத்துவரை வயிறுகொண்ட பணக்கார ரன்போல் கட்டிலின்பம் காண்பதற்கா? இல்லை யில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 3O4