பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகளே கொடுவாளைத் தீட்டித் தம்மை அறுப்பவர்க்குக் கொடுப்பதுபோல், ஒய்வில் லாமல் பாடுபடும் பாட்டாளி மக்கள், ஏய்க்கும் பணக்காரர் பைகளையே நிரப்பு கின்றார், கேடுகெட்ட இந்நிலைமை மாறா விட்டால் கேவலந்தான் நம்வாழ்வில் மிஞ்சும்; இந்த நாடுபெற்ற சமுதாயம் என்றென்றைக்கும் நலிகின்ற சமுதாயம் ஆகிப் போகும். அல்லலுறும் பாட்டாளி பொருளா தார அடிமையினால் அரசியலில் அடிமை யாவான்; கிள்ளுகின்ற பசியவனைச் சமுதா யத்தில் கீழ்மகனாய் ஆக்கிவடும்; பளிங்கு போன்ற உள்ளத்தைப் பாழாக்கும்; உயிரின் மேலாம் ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும்; முதலா ளித்வ முள்ளிருக்கும் வரைவறுமை குத்தும்; நம்மை மொட்டையடிக் கும்.சுரண்டல் இருந்தே தீரும். கையலுத்து வருந்துகின்ற ஏழை மக்கள் களைப்படைந்த தோள்களின்மேல், அழுத்துகின்ற தெய்வீகப் பெருஞ்சுமையே சமயம்; தங்கள் தேவைக்குப் போராடித் தோற்ற மக்கள் பொய்யான கடவுளையும், புராணம் கூறும் புரட்டினையும் நம்புகின்றார்; சொர்க்க வீடு மெய்யென்றும் இவ்வுலகில் கிட்டா இன்பம் மேலுலகில் கிட்டுமென்றும் எண்ணு கின்றார். முருகுசுந்தரம் கவிதைகள் 305