பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடல் வீழ்ந்த பின்னர் எரித்தஅச் சாம்பல் தன்னைப் பொன்னொளிக் கங்கை யாற்றில் போடுக கொஞ்சம்; பின்னர் என்னுயிர்க் குயிர தான இந்திய நாட்டில் உள்ள பண்ணையில் தூவ வேண்டும் பறக்கின்ற ஊர்தி ஏறி. கங்கையில் எனது சாம்பல் கலப்பதால் ஆத்தி கத்தில் சங்கமம் ஆனேன் என்று சற்றும்நீர் எண்ண வேண்டாம் கங்கையிந் நாட்டின் சின்னம் காக்கின்ற உழவ ரெல்லாம் தங்கிவாழ் பண்ணை தானித் தாயகத் துயிர தாகும். பழமையின் பெயரா லிந்தப் பாரத நாட்டில் நீங்காப் பிளவினைச் சமயம் சாதி பெருக்கிச்சீ ரழித்திட் டாலும் பழமையிற் செழித்த நம்பண் பாட்டினைப் போற்றி யன்பால் தொழுதனன் இறுதி யாகத் துணைக்கரங் குவித்து; வாழி! கவிஞர் முருகுசுந்தரம் 312