பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைபோன்ற பெருங்களிற்றுப் படையை வென்ற மாமன்னர் பேரரசும் மறைந்து போகும் வளையாத கொடுமுடியை விண்ணில் நீட்டி வளர்ந்திருக்கும் பனிமலையும் தூள்து ளாக்கும் கலையாத ஒவியம்போல் யமுனை ஆற்றின் கரைநிற்கும் கலைக்கோயில் அழிந்து போகும் குலையாத நெஞ்சுடைய கவிதை வேந்தன் குவித்துவைத்த நன்னூல்கள் என்றும் வாழும். குனியாத குன்றம் எரியுந்தீ குனிவதில்லை; இமயமலை குனிவதில்லை; எவர்முன் னாலும் மரியாதைக் காகவுந்தன் தலைகுனிதல் பாவேந்தன் வழக்க மில்லை. விரிநிலவுக் கல்லாமல் வேறெதற்கும் கடலெழுந்து நின்ற தில்லை; பெரியாருக் கல்லாமல் பிறர்முன்னால் இவனெழுந்து நின்ற தில்லை, முருகுசுந்தரம் கவிதைகள் 315