பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியிடை அசைப்பர்; தேனைக் கொட்டுவர் அமுதப் பேச்சால்! அடியெடுத் தசைந்து வந்தே அழகிய தேர்போல் நிற்பர்! கடிகார ஓசை போலக் காற்செருப் போசை செய்ய அடிமாறி நடந்து செல்லும் அழகினை என்ன சொல்வேன்! அருந்துயர்க் கடலில் நம்மை ஆழ்த்திடும் நோய்கள் எல்லாம் மருந்தினால் பாதி போகும்; மங்கையர் இவர்கள் கையில் அருந்தினால் பாதி போகும்; அழகுமோர் மருந்து தானே? மருந்தினால் தீரா நோய்இம் மங்கையர் தொட்டால் தீரும். 1960-ல் ஸ்டான்லி மருத்துவ மனையில் படுத்திருந்த போது எழுதியது. முருகுசுந்தரம் கவிதைகள் 321