பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக் கேட்கும் என்நண்பர் முருகு சுந்தரனார் பருகிடவே தமிழ்தருவார். உருகும் திருவாசகத்திற்கு நெஞ்சென்பர்; இவர் வாசகமும் இவவாறே! சேலம் கணக்குக் கவியரங்கம் 14-1-73 டாக்டர் ஒளவை நடராசன் 'கொழுந்துவிட்டெரியும நெருப்பு வட்டத் திற்குள் கொளுத்தப்படாத கற்பூரம் என்று கலைஞர் ஓர் உவமையைக் கூறினார். ஆனால், முருகுவின் பனித்துளிகள் காப்பியத்தைப் பார்த்தபோது நீர்த்துப்போன கற்பூரங்களிடையே நிமிர்ந்து எரியும் சுடர் விளக்கு என்ற புது உவமையை எழுதலாம் போலத் தோன்றுகிறது. இங்கும் அங்கும் இறைந்து கிடக்கும் சொல் நட்சத்திரங்களிடையே குளிர்ச்சியான ஒளிக்கற்றைகளால் வானத்தை வளைத்துக் கொண்டு ஒளி மழையைப் பொழிகின்றது இந்தக் கவிதைக் காப்பியம். பாரதி வழியில் பாவேந்தர்க்குப் பிறகு நம் கண்ணில் படும் கவிஞர்களில் முருகுசுந்தரம் ஒருவராக ஒளிச்சுடராக விளங்குகிறார். Dr. S.N. Kandasamy, Tamil University, Tanjore: Thiru Murugusundram, who is a Boswell to Bharathidasan, himself is a good poet in the model of his mentor Bharathidasan. Indian Express 30-1-1991 பேராசிரியர் இ.சு. பாலசுந்தரம், மதுரை: முருகு என்ற சொல்லின் பொருள்கள் முழுமையும் நூலுக்குப் பொருந்தும், 'பாரதி-பாரதிதாசனுக்குப் பிறகு கவிதை நூலின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்டு வாங்கும் நூலாகக் கடைதிறப்பு இருக்கிறது என்று மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர் சிலிர்ப்புச் செய்தி தருகிறார். முருகுசுந்தரம் கவிதைகள் 323