பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனத்தான் கம்பன் படைத்த அகலிகையிலிருந்து மாறுபட்ட ஒரு பாத்திரமாக அவளைப் படைத்திருப்பதற்கான காரணத்தைத் தெளிவு படுத்தியுள்ளார். அப்படியிருக்க அமுதசுரபி ஏப்ரல் 1998 இதழில் வெளியான இக்கவிதையைப்பற்றிப் பிரேமா நந்தகுமார் எழுதியுள்ள விமர்சனக் கடிதம், இவர் படைப்பு அகலிகையினைக்காமத்துக்கு ஆட்பட்டு, உயர்ந்ததான பெண்மை நலத்தினை இழந்தவளாகச் சித்தரித்தது ரசிக்கக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றது. இது புதுமைப் பித்தனின் சாபவிமோசனம் வெளியானபோது, ராஜாஜி அவர்கள் வெளியிட்ட கண்டனக் கருத்துரையின் எதிரொலி போல அமைந்துள்ளது. இலக்கிய விமர்சனத்தில் பழமைவாதிகள் அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரியான பார்வையினர் என்பதனை மெய்ப்பிப்பதாக இவரது கடிதம் அமைந்திருப்பதில் வியப்பேதுமில்லை -இவர்கள் பார்வையில் அகலிகை கவிஞர் முருகுசுந்தரம் 326