பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைக் களிறு அவள்மீது வேகமாகப் பாய்ந்து பின்னால் நெருக்கியது. அவஸ்தை தாளாமல் அகலிகைப்பிடி அலறியது. அருகில் படுத்திருந்த கெளதமன் அவளைத் தட்டி யெழுப்ப அச்சத்தோடு அவன்மீது அப்பிக் கொண்டாள். ‘என்ன? - என்றான் கெளதமன், 紐」訂f@}をリf வெள்... ளானை' என்று குழறினாள் அகலிகை. "எங்கே?" என்றான் அவன். 'பின்னால்!” என்றாள் இவள். குழந்தையாக அணைத்துத் தோளில் தட்டிக் கொடுத்தான் அவன். அவன் தாடி மூக்கிலும் வாயிலும் நுழையத் திரும்பிப் படுத்துக் கொண்டாள் இவள்! 口口 முருகுசுந்தரம் கவிதைகள் 29