பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரல் - தவறி விழும்போது ஏற்படும் அபசுரமாக அவளுக்குள் கொந்தளிப்பு. வந்த அந்தக் கெளதமன் மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு... இடியுடன் கூடிய மின்வெட்டாக அவள் - நினைவில் பளிச்சிட்டது. 'இந்திரன்! ஐராவதத்தை ஆரோகணிக்கும் இந்திரன் !! அமரர் தலைவனே என்னைத் தேடி...!!... அகல்யாவின் பேரழகுப் பெருமிதம் கொக்கரித்து மேலெழும்பியது. நீண்ட நேரம் புகைந்து கொண்டிருந்த அவள் ஒமகுண்டத்தில் இந்திரன் - நெய்யாக இறங்கினான் ! குப்பென்ற ஜூவாலை! தான் ஓர் அருவியாக மாறி, பாறையில் மோதி, சுழலில் சிக்கி, கற்களைப் புரட்டிக் கொண்டு அதல பாதாளத்தில் தலைகுப்புற விழுவதாகவும் கவிஞர் முருகுகந்தரம் 32