பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமைப்படும் முனிசிரேஷ்டர்கள் பர்ணசாலைப் படியைக் கேட்டுவிட்டா மிதிக்கிறார்கள்?' - என்று குமுறினாள் அகலிகை. 'அகல்யா! கெளதமன் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாரா யிருக்கிறான் - என்றார் விசுவாமித்திரர். ‘என்னைப் பொறுத்தவரையில் அது சோர வாழ்க்கை! மீண்டும், அது எனக்கு வேண்டாம் . என்றாள் அகலிகை. அகல்யா! உன் முடிவுதான் என்ன?” என்றார் விசுவாமித்திரர். ‘சுவாமி', நீங்கள்சர்வ வல்லமை படைத்தவர். என்னை - ஒரு பெண் யானையாக்கி அமராபதியின் கற்பகச் சோலையில் விட்டு விடுங்கள்!' என்று கூறிவிட்டுத் தலைகுனிந்தாள் அகலிகை. முடிவுரை அகலிகை வால்மீகியின் படைப்பு. அகலிகையின் கதை முதன்முதலாக வால்மீகி இராமாயணத்தில் தான் காணப்படுகிறது: முருகுசுந்தரம் கவிதைகள் 39