பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்சோதி இருட்டில் தான் துல்லியமாக என்னை நான் பார்க்க முடிகிறது. விடியலுக்குக் காத்திருக்கும் என் - அரும்புகள் எல்லாம் இருட்டில்தான் மலர்கின்றன. இருட்டில் என் வலிமை யானையின் மத்தகத்தையும் பிளந்துவிடும் வெளிச்சத்தில் - வெள்ளாடாகி விடும். கர்ப்பக்கிரக இருட்டில் இருப்பதால்தான் கடவுளுக்கே மரியாதை. எனக்கு - அமைதி தேவைப்படும்போது என்னை நான் இருட்டாக்கிக் கொள்கிறேன். இன்பம் தவம் தியானம் எல்லாமே இருட்டு வெளிச்சங்கள். முருகுசுந்தரம் கவிதைகள் 43