பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் போது இளநீரை வீதியில் வாங்கிக் கொள்கிறேன். தூணிலழகிய மாளிகையைத் துடைத்துப் பெருக்க வேலைக்காரர் வேண்டுமே! அவர்களோடு மல்லுக் கட்ட என்னால் ஆகாது. இவையெல்லாம் எனக்கு வேண்டாம். பாரதிக்கே கொடுத்துவிடு. ஆனால்... அவன் சொன்னானே... பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து அவர் முகத்தில் உமிழும் நெஞ்சுரத்தை மட்டும் எனக்குக் கொடு! அது போதும்! அரண்மனை அலிகள் அரண்மனைக்கு எப்போதும் அலிகள் தேவைப்படுகிறார்கள். சிலர் - பிறவி அலிகள். சிலர் - அவசியத்துக்காக அலிகள் ஆக்கப்படுகிறார்கள் மேலிடத்துக்கு இவர்களே ஆற்றுப்படுவர்; பிறரையும் - ஆற்றுப் படுத்துவர். முருகுசுந்தரம் கவிதைகள் 49