பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவல் எந்த இந்துவையும் உயிரோடு எரித்ததில்லை எந்தக் கிறித்தவனையும் சிலுவையில் அறைந்ததில்லை. சீக்கியக் குடும்பங்களைக் கூண்டோடு வெட்டிக் கொலை செய்ததில்லை ஏனென்றால்... நான் ஒரு நாத்திகன் நாய் இதை நான் ஐந்தாண்டுகளாக வளர்த்தேன். சீறும் சிறுத்தைபோல் தோற்றத்தாலேயே நடுங்கவைக்கும் ஜெர்மன் ஷெப்பர்டு அல்ல இது அதட்டும் இடிக்குரல் அல்சேஷனும் அல்ல! பாவையரின் பட்டு மடியில் படுத்துச் சுகங்காணும் பாமரேனியனும் அல்ல! அரைநாய் உயரமும் ஒன்றரை நாய் நீளமும் உள்ள டேஷ்ஹண்ட்டும் அல்ல! இது கோம்பை போல முருகுசுந்தரம் கவிதைகள் 61