பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தும் மிதந்தும் நளினமொழி பேசியும் உணர்ச்சியில் கரைந்து உலகத்தை மறந்தும் அன்றிலாய் வானம்பாடியாய், புணர்ச்சி இலக்கியத்தில் மட்டுமே தோன்றும் ஃபோனிக்ஸ் பறவையாய்த் திரிய வேண்டிய வயதில் உன் காலொன்று வெட்டுப் பட்டுக் கண்ணிர் ஒடையானாய்! ஆனால், எங்கள் நாட்டுத் திருக்குறள் போல் ஒன்றரை அடியிலேயே உலகப்புகழை ஒடி வளைத்துக் கொண்டாய்! உனக்கு வந்த புற்று நோய்...! நோயா அது! சதையுடம்பின் சகாரா! மேனி மண்ணின் மேல்விழுந்த ஹிரோஷிமா! தசைக் கறையான்! உயிரைச் சுரண்டியுண்ணும் குருத்து வண்டு! வளரும் வயிற்று வாதாபி அரக்கன்! உள்ளே கருவுற்று உள்ளே வளர்ந்து பின்னர் வளர்த்த முட்டையை கவிஞர் முருகுசுந்தரம்