பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டர்கள் கலவரம்! நடுவில் ஓயாமல் குண்டு வெடிப்பு! கூக்குரல்! அழுகை! துக்கம் வருமா? சலீம்: ஆமாம் சாப்! தெருவெங்கும் கருகிய சீக்கியர் பி.ைவ்கள். கவிழ்ந்த ஒடங்களாகக் கால்வாயெங்கும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் பிணங்கள். யா... அல்லா! கசக்கி எறிந்த மாலைகளாகக் குரல்வளை நெறிக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்கள்! உயிர் பிழைத்த ஒரு சிலரும் குருத் வாராக்களில் தஞ்சம் புகுந் திருக்கின்றனர். நெடுமுடி: சலீம்! மெதுவாகப் பேசு, கலவரக் காலங்களில் காற்றும் நமக் கெதிரி. அடுப்பு மூட்டு. தேநீர் போட வேண்டும். சலீம்: இந்த நாட்டில் இந்து இருக்கிறான்; முஸ்ல்மான் இருக்கிறான், பெளத்தன் இருக்கிறான். பார்சி இருக்கிறான் முருகுசுந்தரம் கவிதைகள் 89