பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் மனிதன் இல்லை சாப்! மனிதன் இல்லை. (தேம்பி அழுகிறான்) : یا E (p) از م) சலீம்! நீ மிகவும் உணர்ச்சி வசப்டுகிறாய்! அழாதே வெளியில் சென்று வெண்ணெயும் ரொட்டியும் சமையலுக்குக் கொஞ்சம் காய் கறியும் வாங்கிவா. (பையை எடுத்துக் கொண்டு சலீம் கிளம்புகிறான்) சலீம்! இன்னுமோர் சேதி. சலீம்: என்ன சாப்? நெடுமுடி: (மெதுவாக) ஒரு பர்தா வேண்டும். சலீம்: என்ன? பர்தாவா? நெடுமுடி: உஷ்! சொன்னதைச் செய், யாருக்கும் இது தெரியக் கூடாது. சலீம்: சரி சாப், (சலீம் வெளியில் சென்றதும் அம்ரிதா மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள். அழுகையால் அவள் கண்கள் சிவந்திருக்கின்றன) கவிஞர் முருகுசுந்தரம் 90