பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ரிதா! இந்தப் பர்தாவை அணிந்து கொள்! சலீம்! தொப்பியைச் சரி செய்து கொள், உடன் சென்று அம்ரிதாவை ஜலந்தர் வண்டியில் பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டு வா, σ6ύιό: சாப்! நானா? நெடுமுடி: ஆமாம் ! நீ தான்! குயிலின் முட்டைக்குக் காக்கையின் கூடு தான் சரியான பாது காப்பு இந்தப் பணிக்கு நீ தான் - என்னை விடத் தகுதியானவன். (அம்ரிதா கண்கள் பனிக்க நன்றியுணர்வோடு நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவளால் பேச முடியவில்லை. அவள் நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. தொண்டை கம்முகிறது. பர்தாவை அணிந்து கொண்டு சலீமோடு வெளியேறுகிறாள்.) காட்சி 4 இடம் : பல்கலைக் கழகவளாகம்: ஆசிரியர் விடுதி நேரம் : LD IT 3} G} உறுப்பினர்: மேகலை, நம்பி, தோகை, சொற்கோ, பணிப்பெண், வீணா. முருகுகந்தரம் கவிதைகள் 93