பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் இந்த வழிகாட்டி, உரையானது முற்போக்கு இலக்கியம் என நாம் கூறுவது தமிழ் நாட்டில் முளைத்தெழுந்த விதத்தையும், அதன் பின்னணியையும் அதில் ஏற்ப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தவறுகளையும் சுயவிமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவதாகவே அமையும் என்றும் இந்தச் சுயவிமரிசனம் நமது வருங்காலத்தைச் செப்பம் செய்து கொள்ள உதவும் என்றும் முன்னுரை யாகக் கூறிக் கொள்கிறேன் . ஒப்புநோக்கான பொருளே உண்டு : இலக்கியத்தில் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது அதன் கருத்து, அதாவது உள்ளடக்கம் சம்பந்தப்பட்டதே யாகும் . இந்த முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது இலக்கியத்தில் என்றுமே இருந்து வந்துள்ளன எனலாம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது, முந்திய சமுதாயத்தில் முற்போக்கானவையாக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்திய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அந்தக் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிப் போய்விடும். பிந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும் , இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச் சமுதாய அமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடுவதேயாகும். அந்தந்தக் காலத்தில் பெரும்பான்மை யான மக்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது அபிலாஷைகளையும், நியாயமான வேட்கைகளையும் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் ஏற்றவாறு மாற்றும் வேட்கை கொண்டதாகவும் இருப்பதே முற் போக்கான கருத்து எனவும், இதற்கு மாறானதைப் பிற் போக்கானது. எனவும் கூறலாம். எனவே, சமுதாய