பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 7 முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் இந்தக் காலத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய முயற்சிகள் திரும்ப வும் வளர்ச்சியடையத் தொடங்கின. 1978ல் மக்கள் கலை இலக்கியக் கடிதம் அவர்களால் உருவாக்கப் பெற்றது . கீழ்க்கண்ட கலை இலக்கிய நோக்கங்கள் முன் வைக்கப் பட்டன. 1. அந்நிய ஏகாதிபத்திய அடிமைச் சீரழிவுக் கலாச்சாரம் அழியட்டும். 2. உள்நாட்டு நில பிரபுத்துவ, பழமை, பிற்போக்குக் கலாச்சாரம் ஒழியட்டும். 3. சமரச, சீர்திருத்தக் கலாச்சாரப் போக்குகள் மாறட்டும். 4. புதிய ஜனநாயக கலாச்சாரம் மலரட்டும். 5, சர்வ தேச பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் ஓங்கட்டும். 6. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதையே இவர்கள் தங்கள் பிரகடனமாகக் கொண் டுள்ளனர் என்பது சிறப்பானது. ஆனால் சமூக ஆய்வுக்குப் பயன்படுகின்ற வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தையே இவர்கள் . கலை இலக்கிய ஆய்வுக்கும் அளவுகோலாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது கலை இலக்கியத்தை மதிப்பிடப் பயன்படும் அழகியல் ஆய்வு முறைகளை இவ... கள் - நிராகரிக்கின்றனர். வரலாற்றுப் போக்கில் சமூகத்தைப் புராதனப்பொதுவுடைமைச் சமூகம், அடிமை உடமைச் சமூகம், நிலப் பிரபுத்துவச் சமூகம், முதலாளித் துவச் சமூகம், ஏகாதிபத்தியச் சமூகம், சோசலிசச் சமூகம் என்று பார்க்கும் சமூக வரலாற்றுப் போக்கிலேயே இவர் ; கள் இலக்கியத்தையும் பார்க்கிறார்கள், அந்த அந்தக் கால சமூகங்களில் தோன்றிய இலக்கியங்கள், அந்த அந்த சமூக