பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 97 ஆளும் வர்க்கங்களின் அரசியல் மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் ஆதரிக்கும் நியாயப்படுத்தும் - பிரச்சார வடிவங்களே என முடிவு செய்கினார்கள் . இந்த அடி படையில், சோசலிச காலத்தின் ஒரு சில கலை இலக்கியங்களையும் சீனாவின் பெரா, ரஷ்யாவின் தாய்) "புராதனப் பொது உடமைக்காலத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும், விவசாயிகள் மத்தியில் காணப் படுவதுமான "வளம் மிக்கப் பாடல் வடிவங்களையும் ஆடல் வடிவங்களையும் எடுத்துக் கொண்டு வெகு ஜனக் கலை, தேசீயக் கலை இவற்றிற்கான வடிவங்களைப் பெற முயல் வேண்டும் என்கிறார்கள். மற்றபடி சோசலிசத்துக்கு முன் படைக்கப்பட்டவை. அத்தனையும் பிற்போக்குத் தன. மானவை என்று இவர்கள் ஒதுக்குகிறார்கள். பாரதி யையும் இவர்கள் அங்கீகரிக்கவில்லை ). சமூகத்தின் பண்பாட்டுத் தளம் தொடர்ச்சியான து. பிந்தியது முந்தியதை நிராகரிப்பதில்லை: வளர்ச்சியுறும் சமுதாயத்தில், ஒவ்வொரு கால கட்டத்திலும், அந்த அந்தக் காலகட்டத்தின் குரலையே - சமூகத்தின் கரகஷியே அன்றைய நிலையில், வளர்ச்சிப் போக்கில், கலை இலக்கியம் பிரதிபலிக்கிறது, இந்த காலக்குரலை உயிர்நிலையாகக் கொண்டுள்ளதால் அந்த இலக்கியமானது, பிற்காலத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் மேலோங்கும் புதுக்குரலையும் கூடப் பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. எனவே ஒவ்வொரு காலகட்டக்கலை இலக்கியங்களிலும் உள்ள "மக்கள் வகைப்பட்ட பண்பாட்டை இனம் கண்டு போற்றவும், அதன் தொடர்ச்சியாக இன்றைய பண்பாட்டை வளர்க்கவும் கலை இலக்கிய வாதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் அதில் உள்ள வர்க்க வகைப் பண்பாட்டைப் பிரித்தறிந்து ஒதுக்கி தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதேபோல வரலாற்றுப் போக்கில் கலை இலக்கியமானவை பல கட்டங்களைத் தாண்டி வந்தாலும், செங்குத்து நிலையில் {7 - axis). கலையில் வீரியமாஈ து, அதன் சமூகச் சார்பு,