பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் அல்லது மக்கள் சார்பு நிலைக்கு இயைபாகவே இருக்கிறது என்ற ஜீவாவின் கருத்தையும் இவர்கள் நிராகரிக்கிழyர்கள்" . மக்கள் கலை இலக்கியக் கழகக் கொள்கை அறிக்கை இவ்வாறு சொல்லுகிறது : புதிய ஜனநாயகம் என்னும் அரசியல் பணியை முற்றிலுமாக ஏற்று, நடைமுறைப்படுத்தி, சமுதாயம் புரட்சியை முடித்து வைக்க ஓர் பாட்டாளி வர்க்க அரசியல் முன்னணிப்படை அவசியப்படுகிறது . இதே அரசியல் பணியின் கலாச்சாரப்பங்கை மக்கள் கலை இலக்கியக் கழகம் ஏற்றுள்ளதால், அத்தகைய பாட்டாளிவர்க்க முன்னணிப் படையின் தலைமையை ஏற்று, அதன் வழி காட்டுதலில் செயல்படுவதும் இன்றியமையாததாகிறது." இவர்கள், தங்கள் கலை இலக்கிய அமைப்பைப் பாட்டாளி. வர்க்க அரசியல் படையின் தலைமையை ஏற்று, அதன் வழிகாட்டுதலின்டர்டி செயல்படும் துணைப்படை யாகவே கொள்ளுகின்றனர்; மார்சீய - லெனினிய கம்யூனிஸ்டு இயக்கத்தின் கிட்டத்தட்ட எல்லாக் குழுக்களுமே பண்பாட்டுத் தளத்தை இவ்வாறு தான் அதாவது அரசியல் தளத்துக்குக் கீழான தாக -- சேவகம் செய்வதாகத்தான் - கருதுகிறார்கள், நடத்துகிறார்கள். சமூகத்தில் மனிதனையும், தேசத்தில் சமூகத்தையும், உலகத்தில் தேசத்தையும், அடையாளப் படுத்துகின்ற முப்பரிமாணங்கள் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை இவை ஒன்றோடொன்று உயிரோட்டமாகப் பின்னியிருந்தாலும் அடிப்படையில் வேறு வேறானவை, சமமுக்கியத்துவம் உள்ளவை, என்பதை அவர்கள் நிராகரிக்கிறார்கள், என்றாலும் இந்தக் கலை இலக்கிய அமைப்புகள் அற்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணிகளை மிகுந்த உலக்கத்தோடு செய்கிறார்கள் கலை இலக்கியம் பற்றி துண்டுப்பிரசுரங்களாகவும் நூல்களாகவும் இவர்கள்