பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இலகக்காங்கள் ~ 99 ஏராளம் வெளிக்கொணர்கிறார்கள் . இன்றைய கொடுமை களை - குறைகளை - வெளிப்படுத்தும் கலை வடிவங்களை உருவாக்கி, மக்கள் முன் அரங்கேற்கிறார்கள். இவர்கள் நடத்தும் மாத, வாரப் பத்திரிகைகளில் ஓவியங்கள் கார்டூன்கள் போன்ற கலை வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இளங்கலைஞர்களை உருவாக்குகிறார்கள்.. ம . க . இ . க ., ம. க. க., பு . . . இ : இன்னும் பல அமைப்புகள் இப் பிரிவில் அடங்கும். அமைப்பு ரீதியாக, பண்பாட்டுத்தளம் அல்லது கலாச்சாரத்தளம் என்ற ஒன்றை முக்கியத்துவப்படுத்தியது தமிழ் நாட்டில் இவர்களின் சிறப்புப் பணி . மேற்கத்திய மார்க்சீயத்தையும், இதர கலை இலக்கியப் போக்குகளையும், மக்கள் கலை இலக்கிய வடிவங்களையும் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு. மிகுந்த சிரமத்துக்கிடையில், சிட்டத்தட்ட '11 - ஆண்டு கால இடைவெளிக்குப் பின், கலை இலக்கியப் பெருமன்றம் தன் 5 - வது மாநில மாநாட்டை அவசர கோலத்தில் பாண்டிச்சேரியில் 1988 ஏப்ரலில் நடத்திற்று . ஆயினும் கலை இலக்கியப் பெருமன்ற வரலாற்றில் இம் மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது . என்றே சொல்ல வேண்டும். பெரும் பிரச்சினையாகக் கிடந்த கொள்கையறிக்கை இம் மாநாட்டில் காரசாரமான விவாதத்திற்குப் பின், செழுமைப் படுத்தப்பட்டு, அங்கீகரிக் கப்பட்டது. ஒரு தலைவருக்குப் பதிலாக ரகுநாதன், கே . சி . எஸ் . அருணாசலம், குன்றக்குடி அடிகளார், திருச்சி தியாகராசன், சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகிய ஐவரைக் கொண்ட தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது . பொன்னீலன் பொதுச் செயலாளரானார் : வாய்மை நாதன், இளசை மணியன், தனுஷ்கோடி ராமசாமி, சொக்கலிங்கம், விருதைகாந்தி ர. மணிமுடி ஆகிய ஐவர் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டுக்குப் பிறகு ஓராண்டுக்