பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 3 நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் எற்பவே, முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும் . எனவே, இதற்கு ஒப்பு நோக்கான பொருளே உண்டு. புதிய சிந்தனை தேவை : டேம் சுதந்தரத்துக்கில் நமது பேரிடம் அ நம்: து பரிசீலனைக்குரிய 'கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், ஏழு ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய ஆண்டுகள், மீதியுள்ள நாற்பத்து மூன்று ஆண்டு களும் சுதந்தரத்துக்குப் பிந்திய ஆண்டுகளாகும். இந்த . ஐம்பதாண்டுக் காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரே அடிப்படையான, 5.மாற்றம், அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த நாடு சுதந்திர நாடாக மாறிய மாற்றமேயாகும். இந்த மாற்றத்தின் விளைவாக நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றின் பரிமாணமும் வீச்சும் எவ்வளவுதான் இருந்த போதிலும், சுதந்தரத்துக்கு முன் நிலவி வந்த பல பிரச்சினைகள் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், மதவெறி, இனவெறி, எழுத்தறிவின்மை முதலான பல் பிரச்சினை கள் - இன்னமும் இருந்துதான் வருகின்றன . என்றாலும் இலக்கியம் சம்பந்தமாக நாம் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று கணித்து வந்ததில், ஒரு மறுபரிசீலனையைக் கோரக்கூடிய அளவுக்கும், நமது திசைவழிநோக்கைச் சீர்செய்து கொள்ள வேண்டிய அளவுக்கும் அண்மைக் காலத்தில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந் துள்ளன. குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு - முன்னால், சோவியத் நாட்டில் தோன்றிய புதிய . சிந்தனையும் கிளாஸ்னாஸ்தும் அதனால் விளைந்துள்ள விளைவுகளும் கடந்த ஓராண்டுக் காலத்தில் சோஷலிச நாடுகள் எனக் கூறப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள