பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 [ முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் மாற்றங்களும், நாம் இந்த அவசியத்தை உணருமாறு செய்துள்ளன எனலாம் ஏனெனில், இவற்றின் விளைவாக, நாம் உண்மை என்று நம்பியிருந்தவை பலவும் பொய் யாகியுள்ளன; பொய் எனக் ககூறிவந்தவை பலவும் மெய் யாகியுள்ளன; திரையிட்டு மூடப்பட்ட உண்மைகள் திகடம்பரமாகியுள்ளன; திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் பலவும் தெளிவாகியுள்ளன. உண்மையில் இன்று சோவியத் நாட்டில் நிகழ்ந்து வருவது மற்றுமொரு புரட்சியேயாகும். தண்ணீர் எவ்வாறு மெல்ல மெல்லச் சூடேறிக் கொதிநிலைக்கு வந்ததும் திடீரென்று கொதித்துப் பொங்குகிறதோ, அதுபோலத்தான் புரட்சி தோன்றுகிறது என்பது நாம் கற்ற பால பாடம். எனவே, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு உள்ளுக்குள் புகைத்து புகைத்து சூடேறி வந்த மக்களின் உணர்வு, வெடித்துப் பொங்கியுள்ளதன் பிரதிபலிப்பே இந்தப் புரட்சியாகும். என்றாலும், அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, அதில் விஷமும் தோன்றிய கதையைப் போலவும், புதுவெள்ளம் பொங்கிப் பிரவகித்து வரும்போது அதில் குப்பைகூளங்களும் கழிவு நீரும் கலந்து வருவது போலவும், இந்தப் பிரதிபலிப்பில் எத்தனையோ விரும்பத்தகாத, எதிர்மறையான தன்மைகளும் தென்படவே செய்கின்றன . என்றாலும், இவையெல்லாம் அடங்கித் தெளிந்து, இந்தப் புதுவெள்ளமே ஒரு ஜீவ நதியாகப் பெருக்கெடுத்துப் பாயும் என்பதற்கான - நம்பிக்கையும் வாய்ப்பும் புலனாகவே செய்கின்றன . இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டாலும், இன்று சோவியத் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன : ஒரு காலத்தில் பழிக்கப்பட்ட எழுத்தாளர் களான அலெக்சாந்தர் சல்செனித்சின், போரிஸ் பாண்டர்நாக், அன்னா அக்மதோவா போன்ற எழுத் தாளர்கள் கவிஞர்களின் நூல்கள் இன்று அங்கு வெளிவரத் தொடங்கியுள்ளன', தடைசெய்யப்பட்டிருந்த நூல்களும்