பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 5 மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப் பட்டிருந்த நூல்களும். திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாக விருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட கேள்விக் கண்களுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப் பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோல் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை, மைக்கேல் ஷோலகோள் ?933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், "மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினி யாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து" வருவதாக எழுதியிருக்கிறார் {Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய 'கன்னி நிலம்' (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்பு கின்றனர் . இதனால் அங்கு "இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?" என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. "சோஷலிச எதார்த்தவாதம்' என ஒன்றிருந்தால், 'முதலாளித்துவ எதார்த்த வாதம்' என ஒன்றும் இருக்கிறதா? என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர் . சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த