பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் வாதத்தின் வரலாம் என்ன என்பதைப் பின்னர்ப் பார்ப்போம். என்றாலும், "தமிழக முற்போக்குக் கலை இலக்கியம் - அரை நூற்றாண்டு” என்ற இந்தக் கருத்தரங்குக்கும், சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று இங்குள்ள நண்பர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள். என்று நம்புகிறேன். ஏனெனில், முற் போக்கு இலக்கியம் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்று நாம் தோற்றுவித்ததற்கும், சோவியத் நாட்டில் நிலவிவந்த இலக்கியப் பார்வைக்கும் சம்பந்தமுண்டு, அதன் தாக்கத்துக்கு நம்மிற் 4.லரும் ஆட்டட்டு இருந்தோம், இருக்கிறோம் என்பதை நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் . சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தவிர்க்கொணாத விதத்தில், நமக்கும் கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய சிந்தனை தேவை என வலியுறுத்துகின்றன என்றும் கருதுகிறேன். இந்தத் தேவையை உணர்ந்து கொள்வதற்கு நாமும் நமது கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உதயம் : எனவே, முற்போக்கு இலக்கியம், அதற்கான இயக்கம் என்பது இந்திய நாட்டில் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் . 1930 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன பாசிஸ்டு இத்தாலி அபிசீனியாமீது படையெடுத்தது; ஐரோப்பாவில் நாஜிசம் வளர்ந்து கொண்டே இருந்தது. ; ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் பெரும் உள் நாட்டுப் போர் நடந்தது; - இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவுக்கு எதிராக குடியரசுச் சேனையில் பிற நாட்டுக் கம்யூனிஸ்டுகளும்