பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 17 தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில பூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி "சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடு படும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்' எனக் கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரிஸ் நகரில் 'கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு' ஒன்று நடைபெற்றது . இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மாரா, தாமஸ் மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும் . சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞ ராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர், 'தீண்டாதான்' {Untouchable), கூலி {Coolie), 'இரு இலையும் ஒரு மொட்டும்' {Two 1.eaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், 'சேவாசதன்', 'கோதான்' முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல அறிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்