பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 – முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ஆகியோர் முன்னின்று தோற்றுவித்தனர். இதற்கு “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்று பெயரும் சூட்டினர். இதற்கு பிரேம்சந்தே தலைவராக இருந்தார்; இந்தச் சங்கம் 1936 இல் தோற்றுவிக்கப்பட்டது; இதன் முதல் மாநாடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது . நாம் பயன்படுத்துகின்ற 'முற்போக்கு இலக்கியம்', 'முற்போக்கு எழுத்தாளர்' என்ற சொல்லாட்சிகளெல்லாம், இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின் உருவானவையே யாகும்; என்றாலும் இவற்றை நாம் எதார்த்தமான நடைமுறைக்குக் கொண்டு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்னரேயாகும். 1936இல் வடநாட்டில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதைத் தொடர்ந்து, 1938இல் கல்கத்தாவில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. இதற்கு ரவீந்திரநாத் தாகூரே தலைமை வசித்தார். இதன் பின் சில ஆண்டுகளில் பம்பாயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது , இதில் கே. ஏ. அப்பாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முன்னின்று பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1943 வாக்கில் /PTA என்ற இந்திய மக்கள் நாடக மன்றமும் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு டில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய தலைநகர்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் கூட, தமிழ் நாட்டில், அதன் தலைநகரான சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, அதற் கான இயக்கமோ தோன்றவில்லை. இவ்வாறு நேர்ந்தது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியதாகும். முப்பதாம் ஆண்டுகள் : . இவ்வளவுக்கும் முப்பதாம் ஆண்டுகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, தமிழ்நாட்டிலும் அரசியல்