பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 9 எழுச்சியும் இலக்கிய மறுமலர்ச்சியும் நிலவி வந்த ஆண்டுகளாகும். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங் களைப் பாடுபொருளாக்கி, நமக்கெல்லாம் முற்போக்கு இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சென்றிருந்தான் பாரதி . என்றாலும் பாரதியின் பாடல்களும் அவரது . பார்வையும். தமிழ்நாட்டில் புத்துயிரும் புதிய சக்தியும், பெற்று, நம்மை மீண்டும் வீறுகொள்ளச் செய்தது . இந்த முப்பதாம் ஆண்டுகளில்தான். இந்த முப்பதாம் ஆண்டுகள் பலவிதத்திலும் முக்கியமானவை. மேலும் தேச விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி வெகுஜன இயக்கமாக மாற்றியதன் பயனாகக் கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணி பகிஷ்காரம், அகிம்சாபூர்வமான போராட்டம் ஆகியவையெல்லாம் பரவலாக நடைபெற்று வந்த காலம். அது; பகவத் சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கி விடப்பட்டதைக் கண்டு, இந்திய இளைஞர்கள் உள்ளம் கொதித்திருந்த காலமும் அதுவே, இத்துடன் இதற்கு முன்பே 1927இல் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பண்டித ஜவஹர்லால் நேரு 1929இல் காங்கிரஸ் இயக்கத்திலேயே முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவராகக் காங்கிரஸ் ' மகாசபையின் தலைமையை ஏற்று, ' அதே ஆண்டில் காந்தியடிகள் முன்மொழிய, 'பூரண சுதந்தரமே இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் லட்சியம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தார்; இதன்பின் 1930 ஜனவரி 26ஆம் தேதியை இந்தியச் 'சுதந்தரப் : பிரதிக்ஞை தினமாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்தத் தினத்தில் மக்கள் இந்தப் பிரதிக்ஞையை ஏற்குமாறு செய்தார் . இத்தனைக்கும் மேல், அவர் தமது சோவியத் விஜயத்துக்குப் பின்னால், இந்தியாவின் லட்சியம் அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் பெறுவதேயாகும் எனக் கூறி, சோஷலிச லட்சியத்தையும் ஆதரித்தார் . இதனால், தேசபக்தர்கள் மத்தியில் தேசபக்தியுணர்வு மட்டும் பண்டிதயே முதன்முறை காங்கிரஸ் மகாந்தியடிகள்