பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - -


முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 11 தமிழி லும் நூல் வடிவில் வெளிவந்தன, மேலும் பிற் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் "செம்பிபாரிகள்' என்று பழித்துரைத்த டி. எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராகவிருந்த 'தினமணி' பத்திரிகையின் 1337 அல்லது 1938 ஆம் ஆண்டு வருட மலரில், புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், நெல்லை இந்துக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், அதன்பின் சென்னை அரசாங்கத்துக்குப் புள்ளிவிவர உதவியாளராகப் பணி - யாற்றியவரும் கல்லூரியில் எனக்கு வரலாற்றுப் பேராசிரி யராகவிருந்தவருமான கே. எஸ். சோணாசலம் சோஷலிசம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையும் வெளிவந்த காலம் அது , இவையெல்லாம் விஞ்ஞான சோஷலிசத்தைத்தான் விளக்கிக் கூறினவா என்பது விதண்டாவாதமான கேள்வி யாகும். அக்காலத்தில் இவற்றை எழுதியவர்கள் தாமும் "மக்களும் சோஷலிசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகவே இவற்றை எழுதினர் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. அரசியலும் இலக்கியமும் : அரசியல் எழுச்சியையொட்டி இந்தக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகள்யாவும், அரசியலோடு இலக்கிய மறுமலர்ச்சியிலும் கவனம் செலுத்தின. 'சுதந்திரச் சங்கில்' நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் தேசிய இயக்கப், பாடல்களோடு, ஏனையோர் எழுதிய பாடல்களும் வெளி வந்தன . தி. ஜ .. ரங்கநாதன் என்ற தி , ஐ . ர. அதில் பணி சாற்றிய காலத்தில் அதில் கதைகளும் வரத் தொடங்கின, 'காந்தி' பத்திரிகையும் அவ்வாறே. புதுமைப் பித்தனே முதன்முதலில் 'காந்தி பத்திரிகையில்தான் எழுதினார்;' 'மகாகவி பாரதியார்' என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த வ : ரா , வின் நூ லும் “காந்தி' பத்திரிகையில்தான் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தன. 'மணிக்கொடி' ஆரம்ப