பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- -- 12 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கன் காலத்திலிருந்தே அரசியல், இலக்கியம் இரண்டிலுமே அக்கரை செலுத்தி வந்தது; பின்னர் “காந்தி' 'மணிக்கொடி', யுடன் இணைந்து விட்டது . என்றாலும் 'மணிக்கொடி' யைத் தோற்றுவித்த கே . சீனிவாசன் - இவர் இவரது தோற்றம் மற்றும் மீசை காரணமாக, 'ஸ்டாலின் சீனிவாசன்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தார் என்பது ஒரு சுவையான விஷயம் 'பாம்டே! ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் பணி யாற்ற, பம்பாய் சென்றுவிட்டார்; சொக்கலிங்கம் 'தினமணி' யின் ஆசிரியரானார்; வ ரா . கொழும்புவிலிருந்து வெளிவரும் “வீரகேசரி'ப் பத்திரிகைக்கு உதவியாசிரிய ராகப் போய் விட்டார். இதற்கெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே பெரிதும் காரணம் எனலாம் . மணிக்கொடியும் உருவ வாதமும் : இதன்பின் 'மணிக்கொடி' பி. எஸ். ராமையாவின் நிருவாகத்துக்கு வந்தது, அப்போதுதான் 'மணிக்கொடி, எழுத்தாளர்கள்' எனக் கூறப்படும் பலரும் அதில் அதிக மான கதைகளை எழுதினர். 'மணிக்கொடி' யை நிர்வகித்து வந்த கதாசிரியரான பி. எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றவர்தான்; 'மணிக்கொடி' எழுத்த ளர்கள் பலரும் அரசியல் உத்வேகத்தின் விளைவாக எழுந்த மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களாக மாறியவர்கள்தாம். என்றாலும், அவர்கள் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற பிரக்ஞையே அற்றவர்களாய், 'மணிக்கொடி'யை 'அவ்வளவும் கதைகள்' என முற்றிலும் ஒரு சிறுகதைப் பத்திரிகையாகவே மாற்றி விட்டார் . பி. எஸ் ராமையா தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவராயினும் அவருக்கு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு என்ற பிரக்ஞையே இருக்கவில்லை என்பதை அவர் எழுதியுள்ள 'மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படித்தாலே புரிந்துகொள்ள