பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 13 முடியும். 'மணிக்கொடி'யில் வெளிவந்த கதைகளிலும் தேசிய உணர்வினால் எழுந்த நாட்டு மக்களின் வாழ்க்கை யையும் போராட்டத்தையும் கதைப்பொருளாக்காமல், பெரும்பாலும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதை களையே எழுதினர். மேலும் அவர்கள் கதையின் கருப் பொருளைக் காட்டிலும் அதன் வடிவ அமைப்பிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார். இதனால் தமிழ்ச் சிறுகதை உலகில் அருமையான வடிவ அமைதி கொண்ட கதைகளை அவர்கள் வழங்கிய போதிலும், சாராம்சத்தில் அவர்களிற் மிகப்பெரும்பாலோர் வெறும் 'உருவ வாதிக' ளாகவே மிஞ்சி நின்றனர். 'மணிக்கொடி' எழுத்தாளர்கள் உருவவாதிகளாகவே மிஞ்சி நின்றனர் என்பது, 'பாரதி மகாகவியா இல்லையா?' என்ற ஒரு விவாதத்தை 1935ஆம் ஆண்டில் "நெல்லை நேசன்' என்ற பெயரில் பி, ஸ்ரீ, ஆசார்யாவும், 'கல்கி' கிருஷ்ணன. மூர்த்தியும் தொடங்கி, பாரதி தேசியப் பாடல்களை, அதாவது "நிரந்தரமற்ற மதிப்புக்களைப் பாடிய காரணத் தால் அவன் தேசிய கவியேயன்றி மகாகவியல்ல" என்று வாதிட்டபோது, இதனை எதிர்த்து பாரதி மகாகவிதான் என்று நிலைநாட்டப் புகுந்த 'மணிக்கொடி' எழுத்தாளர் களான (சிட்டி') பெ. கோ . சுந்தரராஜனும், கு . ப . ராஜ கோபாலனும், 'தேசிய கீதங்களைப் பாடிய பாவத்துக்காக, பாரதி சந்தேகாஸ்வதமான திதியில் இருந்து வருகிறார்" என்றும், 'தேசிய கீதங்களைப் பாடிய பாவம்தான் பாரதியை தேசியக் கவியாக்கி விட்டது" என்று தாமும் எழுதி, பி , ஸ்ரீ'. ஆசார்யாவும் கல்கியும் விரித்த வலை யிலேயே தாமும் விழுந்துவிட்டனர் . அதாவது ஒரு மகாகவி தேசிய கீதங்களைப் பாடுவது என்பது பாவம் தான், தேசியக் கவி என்றால் அது ஒரு மட்டமான தகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாரதி மகாகவிதான் என்பதை நிரூபிக்க பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, முதலியவற்றை மேலை நாட்டுப் பெருங் கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டுக் காட்ட முற்பட்டனர். எனினும் தேசிய கீதங்கள்