பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் அல்லாத 'நிரந்தரமான உண்மைகளைப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட. -- அதாவது கல்கியும் பி. ஜி. யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட, ஏழைகளைத் தோழமை கொள்வாள் - செல்வம் ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் -- மேலவர், கீழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான் {கண்ணன் - என் தந்தை) என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய - அதாவது உருவ வாதம் பற்றிய - விவாதமாகவே மாறி விட்டது. என்றாலும், இதே காலத்தில், 'ஆனந்தவிகடனில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் 'மணிக்கொடி' எழுத்தாளர்களைப் போல் உருவ வாதியாக மாறிவிடவில்லை . இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், 'மணிக்கொடி' எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது 'தியாகபூமி', 'மகுடபதி போன்ற நாவல் களும், 'கவர்னர் விஜயம்' போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, 'மணிக்கொடி' எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டு