பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் கட்டிக் கொண்டிருந்தேன். ஆமாம். பட்டணத்தில் மாவிலையைக் கூட்டக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். என்ன மாவிலைக்கு வர விலை என்று பிரமித்துப் போகாதீர்கள் . மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால், 'மரத்தில் ஏறிப்பறித்து வீடுதேடிக் கொணர்ந்து கொடுப் பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். அதுதான் விலை" என்று எழுதியுள்ளார். இதேபோல், "பக்த குசேலா' என்ற தலைப்பில் அவர் எழுதிய “சினாரியோ'க் கதையின் முன்னுரையில், "வறுமை முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி , வியாதியும் கூட... மனித சமுதாயத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும் வளர்க்கவும் அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம் . ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு* என்றும் அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழில் முதன் முதலில் எழுதிய தமிழ்க்கதாசிரியர் புதுமைப்பித்தனே யாவார். மேலும் அவரது 'கவந்தனும் காமனும்' என்ற கதையில் தெரு மூலையில் நிற்கும் ஒரு விலைமாதினைச் சுட்டிக் காட்டும்போது "அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு; உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான் , ரொம்ப ஜம்பமாக நாசூக்காகக் கண்ணை மூட வேண்டாம், எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான் . " என்றும் அவர் எழுதி யுள்ளார், இவை யாவும் நான் முன்னர் கூறிய கருத்தை - உறுதிப்படுத்துகிறது எனலாம். இது விஷயத்தில் புதுமைப் பித்தன் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நின்றார் எனலாம்.