பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் (113 காரணம் என்ன? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலினை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இந்தக் கதி நேர்ந்தது. ஸ்டாலின் தன் கொள்கையை நிறைவேற்ற விரும்பினால் இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண் டிருப்பது அபாயம். ஓரிடட்லர் நிலையும் அதுதான், 'உமாயை இல்லாத கண்களுடன் ருஷியக் காட்சி' என்று பாடட்ஸ் லோன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் . "ருஷியா ஏலில் ஜனநாயகமே இல்லையாமே, அபிப்பிராய! பேதங் களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லையாமே' என்பன போன்ற கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? 'ஜெர்மனியில் நாஜிப் பிரசாரத்தைத் தவிர வேறு பிரசாரம் அனுமதிக்கப்படுகிறதா? சர்க்கார் ஒரு புதுச் சமூகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறது. ஆகவே, அதற் கேற்றாற்போல் எல்லாம் தயார் செய்யப்படுகிறது' என்று அவர் எழுதி யிருக்கிறார். இதையே ஜெர்மனி விஷயத்தில் திருப்பி வாசிக்கலாம் அல்லவா?" (இங்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் புத்தகம் பாட்ஸ்லோன் எழுதிய Hussia without illusions என்ற புத்தகமாகும்) . மேற்கோள் காட்டிய இந்தப் பகுதி நாலின் பிற்பகுதியில்தான் காணப்படுகிறது ; இந்தப் பகுதியின் நடையும் இது புதுமைப்பித்தன் எழுதியதல்ல, ரமாரத்தினம் எழுதியதே என்பதைத் தெளிவாக்குகிறது . என்றாலும் இந்தக் கருத்து புதுமைப்பித்தனுக்கும் உடன்பாடானதே என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவை யில்லை, நூலாசிரியர்கள் இருவரும் ஸ்டாலினையும் "ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரியாகலே மதித் திருந்தனர் என்பதும், எனவே புதுமைப்பித்தன் 1939ஆம் ஆண்டிலேயே ஸ்டாலினை வெறுத்திருக்கிறார் என்பதும் தெளிவு . (இங்கு வேறு ஒரு சுவையான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நாஜிப்படையெடுப்பின் போது 1941 இல் நடைபெற்ற போரைப் பின்னணியாகக் கொண்டு, People Irnriyortal - இறவாத மனிதர்கள் என்ற சிறந்த போர்க்கால நாவலை எழுதிய வாஸிவி கிராஸ்மனின் Life