பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் and Destiny வாழ்க்கையும் விதியும் - என்ற நாவல் (இது குருஷ்சேவ் ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்ட நாவலாயினும், அப்போது இதனை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது) . இப்போது சோவியத் நாட்டில் கிளாஸ்னாஸ்த் தொடங்கிய பின்னால், அங்கு வெளியிடப்பட்டுள்ளது . இந்த நாவலில் அவர் ஸ்டாலி னையும் ஹிட்லரையும் ஒரே விதமான சர்வாதிகாரி களாகவே மதிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் கூறும் வாதங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும் (Soviet Literature எண். 11/88). இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மேலை நாட்டில், குறிப்பாக மாஸ்கோ விசாரணைகளுக்குப் பின்னால், சோவியத் அபிமானி களாகவும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாகவும் அல்லது அனுதாபிகளாகவும் இருந்த பல எழுத்தாளர்கள் கட்சியிலிருந்து விலகினர்; அதன்பால் கொண்டிருந்த அபிமானத்தைக் கைவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பிரபலமான ஆறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதினர்; இந்தக் கட்டுரைகள் The God that failed - "கைவிட்டுவிட்ட் கடவுள்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது', ஆர்தர் கீஸ்லர், இக்னே ஜியோ சைலோன், ரிச்சர்டு ரைட், ஆன்ட்ரி ஜிட், லூயி பிஷர், ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் ஆர்தர்கீஸ்லர் 1931இல், கம்யூனிஸ்டுகள் கட்சியில் சேர்த்து. 1938இல் அதிலிருந்து விலகியவர். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குச் சென்றிருந்த காலத்தில் ஜெனரல் பிராங்கோவினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தச் சிறைவாசத்தை அவர் Dialogue with Death மரணத்தோடு உரையாடல் - என்ற நூலில் வருணித்திருக்கிறார் . இந் நூலின் நடையழகையும் வேகத்தையும் வைரம் பாய்ந்த சொல்லாட்சியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இவரே மாஸ்கோ விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு,