பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | - - நான் முன்னர் குறிப்பிட்ட parkness at Scor:' என்ற நாவலையும் எழுதியவர். இக்னே ஜியோ சைலோன் 1921இல் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்; டோக்ளியாட்டியின் நெருங்கிய தோழர், டோக்ளி யாட்டியுடன் இருபதுகளின் இறுதியில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் கூட்டம் ஒன்றுக்குச் சென்று, அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் 1931 ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியலர் , இவர் 'பாண்ட மரா' (Fontamara), Bread and wine - ரொட்டியும் ஒயினும்' போன்ற அருமையான நாவல்களை எழுதியவர். ரிச்சர்டு ரைட் என்பவர் அமெரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்; ஜான் ரீடு கழகத்தின் மூலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தவர். இவர், பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர் , ஆன்ட்ரி ஜிட் நோபெல் பரிசு பெற்ற பிரபலமான பிரஞ்சு எழுத்தாளர்; இவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரவில்லை ; எனினும் அதில் ஆர்வம் காட்டியவர் . இவர் 1926இல் சோவியத் எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தவர் . லூயி பிஷர் நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த பிரபலமான அமெரிக்கப் பத்திரிகை நிருபர்; "காந்தியும் ஸ்டாலினும்' என்ற நூலை எழுதியவர்; இவர் இந்தியாவுக்கு வந்து காந்தியடிகளோடு சிறிது காலம் தங்கியிருந்து, காந்தியடிகள் பற்றிய வரலாறு ஒன்றையும் எழுதியவர். ஸ்டீபன் ஸ்பெண்டர் சிறிது காலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்; பிரபலமான ஆங்கிலக் கவிஞர்; இலக்கிய விமரிசகர், இவரும் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த அறுவரும் தாம் சோவியத் நாட்டுக்குச் சென்ற போது அங்குக் கண்டவை, கம்யூனிஸ்டுக் கட்சி யோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாஸ்கோ விசாரணைகள் தம்மில் ஏற் படுத்திய பிரதிபலிப்புகள் ஆகியவற்றையே மேற்குறிப்பிட்ட நாலில் எழுதியிருந்தனர் . இந்த நூல் மேலை நாட்டு எழுத் தாளர்கள் பலரின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய