பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ( முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் நா லாகும். 'மணிக்கொடி.'யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் மேலைநாட்டு இலக்கியங்களில் பெரும் கவனம் செலுத்தி வந்தவர்களாகவும், அவற்றில் ஈடுபாடு கொண்ட வர்களாகவும், வடிவ அமைதி மற்றும் கருப்பொருள் முதலியவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தததால், மேலை நாட்டில் வெளிவந்த மேற்கூறிய நூ லும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களையும் பாதித்திருக்கக் கூடும். “அதனாலேயே ராமரத்தினம், புதுமைப்பித்தன், போன்ற வர்கள் சோவியத் கம்யூனிச விரோதிகளாக மாறியிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. மீண்டும் முப்பதாம் ஆண்டுகள் : இனி நாம் மீண்டும் முப்பதாம் ஆண்டுகளுக்குச் செல்வோம் . முப்பதாம் ஆண்டில் தோன்றிய முற்கூறிய மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம், தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமல்லாது, தாகர், பிரேம்சந்த், முதலிய எழுத்தாளர்களின் கதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டு வந்தன; சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் - சந்திரதத்தர் போன்ற வங்க எழுத்தாளர்களின் நாவல்களும் தொடர்கதைகளாக வெளி வந்தனர். பின்னர் இவை புத்தகங்களாகவும் வெளிவந்தன, மேலும் இந்தக் காலத்தில் புத்தக வெளியீடும் சூடு பிடித்தது . முதலில் 'மணிக்கொடி'யின் சோதர ஸ்தாபன மாக நவயுகப் பிரசுராலயம் தோன்றியது. ப, ரா. என்ற ப . ராமசாமி (இவர்தான் நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாக்சிம் கார்க்கியின் 'மதர்' என்ற நாவலை 'அன்னை' என்ற தலைப்பில் சுருக்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்; 'தாய்' என்ற தலைப்பில் நான் செய்த முழுமையான மொழிபெயர்ப்பு 1951இல் தான் வெளி வந்தது) சோஷலிசத்தையும் சோவியத் அனுபவத்தையும் பற்றி எழுதிய 'எல்லோரும் ஓர் குலம்' என்ற நூல் அந்தப் பிரசுராலயத்தின் முதல் நூலாக வெளிவந்தது . இதனைத்