பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 23 தொடர்ந்து புதுமைப்பித்தனும் ராமரத்தினமும் சேர்ந்து ஹிட்லரைப் பற்றி எழுதிய 'கப்சிப் தர்பார்' என்ற நூலும், முசோலினியைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய 'பாசிஸ்டு ஜடாமுனி என்ற நூலும் வெளிவந்தது . இதன் பின் 'புதுமைப்பித்தன் கதைகளும் இதன் வெளியீடாகவே வெளிவந்தன, இதே காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனி 'தமிழ்நாட்டுச் சிறுகதைகள்' என்ற வரிசையில் பல தமிழ் எழுத்தாளர்களின் தனித்தனித் தொகுதிகளையும், மற்றும் பல் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட 'கதைக் கோவை' களையும் வெளியிடத் தொடங்கியது. இத்துடன் வங்க நாவல்களும், இந்தி நாவல்களும் வெளிவந்தன. கலைமகள். பிரசுராலயமும் இதேபோன்ற நூல்களை வெளியிட்டதோடு நாற்பதுகளின் தொடக்கத்தில் காண்டேகரின் நூல்களையும் வெளியிடத் தொடங்கியது . இதே முப்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான் 1939 இல். வை, கோவிந்தன் 'சக்தி' பத்திரிகையைத் தொடங்கினார், 'சக்தி'யில் தமது எழுத்துக்கள் இடம் பெறவேண்டும் என்று பிரபல எழுத்தாளர்கள் கூடத் தவிக்கும் அளவுக்கு தி, ஜ, ர, அதன் ஆசிரியராகவிருந்த காலத்தில் அதன் தரம் உயர்ந்திருந்தது . இதன் பின் நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் 'சக்தி காரியாலயம்' புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியது . வெ. சாமிநாத சர்வ எழுதிய "சோவியத் ருஷ்யா', 'ரூஸோவின் சமுதாய ஓப்பந்தம்', 'கார்ல் மார்க்ஸ்' போன்ற புத்தகங்களும் வெளிவந்தன. எனவே முப்பதாம் ' ஆண்டுகளின் தொடக்கத்தில் - தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி நாற்பதாம் . ஆண்டுகளின் தொடக்கத்தில் பலவகையிலும் முழுமலர்ச்சி பெற்றிருந்தது என்றே கூறலாம். ஜனசக்தியின் தொடக்கம் : இதே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ. வெ. ரா. சோவியத் நாட்டிலிருந்த நாத்திகர் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று