பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் திரும்பியதன் விளைவாக, லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாசு,, 'லெனினும் மதமும்' என்ற மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவரான ம. சிங்காரவேலு எழுதிய சில நூல்களையும் 'பொதுவுடைமைத் தத்துவங்கள்' என்ற நூலையும் பெரியார் தமது குடியரசு பதிப்பக' வெளியீடுகளாக வெளியிட்டார் , அத்துடன் அவர் பொது வுடைமைப் பிரசாரமும் செய்தார். ஆனால் அன்றைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆர் , கே . சண்முகம் செட்டியார் முதலிய பிரமுகர்கள். இந்தப் பொதுவுடைமைப் பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியேறினர்; மேலும் இந்தப் பிரசாரத்தைக் கைவிடு மாறு அன்னிய அரசாங்கமும் பெரியாரை நிர்ப்பந்தித்தது . இவற்றைத் தொடர்ந்து பெரியார் பொதுவுடைமைப் பிரசாரத்தைக் கைவிட்டுச் சமூகச் சீர்திருத்த விஷயங் களிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார் . இவ்வாறு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பொது வுடைமைக் கொள்கையைக் கைவிட்ட சமயத்தில், அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியைத் தோற்றுவித்தவர்தான் தோழர் ஜீவானந்தம். என்றாலும், அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுக் கட்சி சட்ட விரோதமாக்கப் பட்டிருந்ததால், டாங்கே போன்ற இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் ஆலோ சனைப்படி, கம்யூனிஸ்டுகள் பலரும் காங்கிரசுக்குள்ளேயே தோன்றியிருந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர், ஜீவாவும் அவ்வாறு சேர்ந்து தமிழ் நாட்டில் அதன் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஏ. எஸ். கே. அய்யங்கார், கே. முருகேசன் ஆகியோரே 1937ஆம் ஆண்டில் நவம்பர் புரட்சி தினத் தன்று, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் பத்திரிகையாக 'ஜனசக்தி' வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.