பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

25

என்றாலும், 'ஜனசக்தியைத் தொடங்கிய காலத்தில், முப்பதாம் ஆண்டுகளில் இருந்து வந்த ஏனைய பத்திரிகை களைப்போல் (இதற்கு பி. எஸ். ராமையாவின் நிருவா கத்தில் இருந்து வந்த 'மணிக்கொடியும்' 'கலைமகள்' பத்திரிகையும் விதிவிலக்காகும்; இவை இரண்டும் அரசியலில் கவனம் செலுத்தவில்லை ) அரசியலோடு கலை இலக்கியத்துக்கும் 'ஜனசக்தியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தத் தலைவர்களுக்கு இருக்கவில்லை, அதேபோல் 1935இல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பின்னரும் கூட, இங்கும் தமிழ்நாட்டில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உதிக்கவில்லை. சொல்லப்போனால், தேசிய எழுச்சியும் உணர்வும் பெருகி, அதன் விளைவாக இலக்கியத் துறையில் ஒரு மறுமலர்ச்சி யும், அதன் விளைவாகப் பல சிறந்த எழுத்தாளர்களும் உருவாகியிருந்த சூழ் நிலையிலும், இலக்கியத்தை முற் போக்குப் பாதையில் கொண்டு செலுத்தவும், அவர்களை ஓர் அணியாக ஒன்று திரட்டவும் அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இருக்கவில்லை . காரணம் அந்தத் தலைவர்களில் ஜீவா ஒருவரைத் தவிர ஏனையோருக்குத் தமிழ் இலக்கி யத்தில் பரிச்சயமோ, அதில் ஆர்வமோ இருக்கவில்லை, ஜீவாவும் கூடப் பாரதி பாடல்களைத் தமது அரசியற் சொற்பொழிவுகளில் பயன்படுத்தியும், பாரதியின் கிளிக் கண்ணிப் பாடல்களை முன்னுதாரணமாகக் கொண்டு காலுக்குச் செருப்புமில்லை ; கால்வயிற்றுக் கூழுமில்லை : பாழுக்குழைத்தோமடா - என் தோழனே பசையற்றுப் போனோமடா! என்று தொடங்கும் பாடல் பாரதியின் 'அச்சமில்லை' பாடலின் சந்தத்தைப் பின்பற்றியதாகும். "சடசடவென்றே முறிந்தே ஜார் விழுந்த காரணம் தரணியில் சோஷலிசம் தழைப்பதற்கு உதாரணம்"