பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் (23 4. அன்று தடைசெய்யப்பட்டிருந்த மார்க்ஸின் 'கம்யூனிஸ்டு அறிக்கை ', லெனின் எழுதிய 'அரசும் 44ரட்சியம்' ஆகிய நூல்களின் ஆங்கிலப் பதிப்புகள், அன்று தலைமறை வாகவிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் மூலம் கிட்டிய சில பிரசுரங்கள் ஆகியவற்றைப் படித்து, கம்யூனிசம் சித்தாந்த அனுதாபியாக இருந்து வந்த நான், இலக்கியத் துறையில் மட்டும் 'மணிக்கொடி.' எழுத்தாளர்களின் முக்கியமாகப் புதுமைப்பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகி யிருந்ததால், நானும் இலக்கியமும் வேறு, அரசியல் வேறு என்பது போன்ற மனப்பான்KைA)விலேயே இருந்து வந்தேன். இதற்கு நெல்லையில் நிலவி? இலக்கியச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகும் . இந்தக்கால கட்டத்தில்தான், அதாவது நாற்பதாம் ஆண்டுகள் தொடங்கிய காலத்தில் தான் கு . அழகிரிசrrit, வேல்லிக்கண்ண ன், நாள் ஆகிய மூவரும் இலக்கியக் கர்த்தாக்களாக உருவாகியிருந்தோம். இவர்களில் கு . அழகிரிசாமியும் என்னைப் போலவே ஆரம்பம் முதல் கம்யூனிசச் சித்தாந்த அடமானியfrகவே இருந்து வந்தார். இருடச்பினும் நாங்கள் மூவரும் அரசிய லுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு, இலக்கி யத்தில் அரசியல் - இடம்பெறாவிட்டாலும் இலக்கியத் துக்கென ஓர் 'அரசியல்' உண்டு என்ற ஞானத்தைப் பெறாதவர்களாகவே இருந்தோம். இது மணிக்கொடி:- எழுத்தாளர்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் மீது ஏற்படுத்திய எதிர்மறையான விளைவு என்றே கூறலாம். இதிலிருந்து நாங்கள் விடுபடச் சிறிது காலம் பிடிக்கவே செய்தது, மேலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு இல்லாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனலாம். என்றாலும், நாங்கள் புதுமைப் பித்தனின் கதைகளையே பெரிதும் விரும்பிய காரணத்தால், எங்கள் கதைகளில் ஆரம்பம் முதலே அவரைப் போலவே எதார்த்தவாதமும், விமர்சன எதார்த்தவாதம் உருவாகி யிருந்தன. இதற்குச் சில கதைகளே விதிவிலக்காக இருக்க லாம் என்றே கூறலாம். சொல்லப்போனால், புதுமைப்