பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அன்றைக்கு மேற்கொண்டிருந்த வாட்டுக் கோட்பாட்டு நிலை, செக்டேரியன் நிலை ஆகிய வற்றின் விளைவாக, பாரதியை வைதிகள் கவி எனவும், முதலாளித்துவக் கவிஞர் எனவும் பழி தூற்றும் காரியம் தொடங்கியது. இதனை தி . க . சி மற்றும். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்க்க நேர்ந்தது . என்றாலும் இந்தப் 'புதுமை இலக்கியம்' இரண்டே இதழ்களுக்குப் பின் தடைசெய்யப்பட்டு விட்டது. இதன்பின் குயிலனைப் பதிப்பாளராகக் கொண்டும், தமிழ் ஒளி ஆகியோரைக் கொண்டும் 1949இல் 'முன்னணி' என்ற வாரப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதுவும் சிறிதுகாலத்தில் நின்று விட்டது. இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். சுதந் திரத்துக்குப் பின் தமிழ் நாட்டில் தோன்றிய முற்போக்கு இலக்கிய இயக்கம், அன்றைய சோவியத் இலக்கியங் களையும் சோவியத் விட்டரேச்சர்' முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கிய விமர்சனங்களையுமே வழிகாட்டி யாகவும் முன் மாதிரியாகவும் கொண்டிருந்தனர். எனவே சோவியத் நாட்டில் அன்று இலக்கியம் பற்றி நிலவிய வக்கிரமான, திரிபான, செக்டேரியன் தன்மைவாய்ந்த கட்சிப் பார்வையே தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய வாதிகளிடம் நிலவியது. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தது எனலாம் . 1956ல் சோவியத் நாட்டில் குருஷ்சேவ் ஆட்சி ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கிய நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டபின்னரே, இந்தக் கட்சிப் பார்வை விடுபடத் தொடங்கியது எனலாம். இந்தக் காலத்துக்கு முன் சோவியத் நாட்டில் நிலவிய நிலைமை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம். முன்னணிக்குப் பின். ஐம்பதாம் ஆண்டுகளில்தான் முற்போக்கு இலக்கிய நோக்கைக் கொண்ட இலக்கியப்